சிக்கன் பிரியாணி
சிக்கன் பிரியாணி
·
சிக்கன் -1/2 கிலோ
·
சம்பா அரிசி -1 ¼ கப்
பெரிய வெங்காயம்-1
·
தக்காளி - 2
·
கொத்தமல்லி தழை - 1 கப்
·
பச்சை மிளகாய் - 3
·
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
·
பட்டை -2
·
கிராம்பு -2
·
ஏலக்காய் -2
·
பிரியாணி இலை-2
·
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
·
மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன்
·
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
·
எண்ணெய் -தேவையான அளவு
·
உப்பு -தேவையான அளவு
செய்முறை
*முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
*அரைத்து வைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி தழை மற்றும் மஞ்சள் தூள்,உப்பு,மிளகாய் தூள்,மல்லி தூள்,தயிர்,இஞ்சி,பூண்டு பேஸ்ட் எல்லாவட்டரையும் சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் உற வைத்துக் கொள்ளவும்.
*பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பொருட்களை போட்டு எண்ணெய் சேர்த்து தாளித்த பின்பு அதில் உற வைத்த சிக்கனை போட்டு சிறிது நேரம் வேக விடவும்.
*வேக வைத்த பின்பு அதில் அரிசியையும் போட்டு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் சிமிழ் வைத்து இறக்கவும்.சிக்கன் பிரியாணி ரெடி.





niz...................
ReplyDeleteTK
Delete